Home இந்தியா சமூக சேவை செய்யும் பாலிவுட் பிரபலங்கள்

சமூக சேவை செய்யும் பாலிவுட் பிரபலங்கள்

620
0
SHARE
Ad

salman_350_040713120229மும்பை, மே 13 – கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தங்களால் இயன்ற அளவு உதவிகளை பாலிவுட் பிரபலங்கள் செய்து வருகின்றனர். நடிகர் சல்மான் கான், தனது பங்காக 2500 தண்ணீர் தொட்டிகளை இலவசமாக வழங்கி உள்ளார்.

முதல்கட்டமாக 400 தண்ணீர் தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. தன்னை நடிகராக நினைக்காமல் ஒரு சாதாரண மனிதமாக நினைத்தே இதை செய்ததாக சல்மான்கான் தெரிவித்துள்ளார்.

சல்மான் கான் மட்டுமின்றி பிரபல பின்னணி பாடகி ஆஷா போன்ஸ்லே முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ.5 லட்சம் வழங்கி உள்ளார்.

#TamilSchoolmychoice

ராஜ்கபூர் நினைவு விருது அறக்கட்டளை சார்பில் நானா படேகர் ரூ.10 லட்சம் வழங்கி உள்ளார். வறட்சி காரணமாக இந்த ஆண்டு துவக்கத்தில் பாலிவுட் நடசத்திரங்கள் சிலர் தண்ணீர் இல்லா ஹோலி பண்டிகை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.