Home இந்தியா விரைவில் இந்தியா வருகிறார் சீன அதிபர் – எல்லைப் பிரச்சனையில் தீர்வு ஏற்படும் என சீனா...

விரைவில் இந்தியா வருகிறார் சீன அதிபர் – எல்லைப் பிரச்சனையில் தீர்வு ஏற்படும் என சீனா நம்பிக்கை

613
0
SHARE
Ad

Tamil-Daily-News_66770136357

பெய்ஜிங், மே 14 –  இந்திய எல்லையில் திட்டமிட்டு ஊடுருவல் நடத்தவில்லை என சீன விளக்கம் அளித்துள்ளது. இந்திய எல்லையான லடாக்கில் நடந்த ஊடுருவல் சம்பவம் இந்திய-சீன உறவுகளை பாதிக்காது எனவும் சீனா தெரிவித்துள்ளது.

இருநாட்டு எல்லைகளை தீர்மானிப்பதற்காக இந்தியாவுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இந்நிலையில் சீன அதிபராக புதிதாக பதவி ஏற்றுள்ள லி கியாங் முதன் முறையாக விரைவில் இந்தியா வர உள்ளார்.

#TamilSchoolmychoice

இதனையடுத்து எல்லைப் பிரச்சனையில் சுமுகமான அணுகுமுறையை கையாள சீனா முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. சீன அதிபரின் வருகையின் போது இருநாட்டு எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சீனாவின் அத்துமீறலை தொடர்ந்து, லடாக்கில் இந்திய ராணுவம் பல்வேறு இடங்களில் கூடாரம் அமைத்து கண்காணித்து வருகிறது.