Home அரசியல் “அம்னோ மூழ்கிக் கொண்டிருக்கிறது; அதோடு சேர்ந்து நாங்களும் மூழ்கத் தயாராக இல்லை” – ஹாடி அவாங்...

“அம்னோ மூழ்கிக் கொண்டிருக்கிறது; அதோடு சேர்ந்து நாங்களும் மூழ்கத் தயாராக இல்லை” – ஹாடி அவாங் கருத்து

537
0
SHARE
Ad

Hadi Awang.கோலாலம்பூர், மே 14 – பாஸ் கட்சியும், அம்னோவும் இணைந்து செயல்பட வேண்டும், மலாய் இன மக்கள் அனைவரும் ஒன்று பட வேண்டும் என்று அம்னோவைச் சேர்ந்த சிலர் விடுத்த வேண்டுகோளை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஏற்க மறுத்துள்ளார்.

அம்னோ என்ற மலாய் தேசிய வாதக் கட்சி மூழ்கிக் கொண்டிருக்கிறது. அதனை இனி காப்பாற்ற முடியாது என்று கூறிய ஹாடி அவாங், பாஸ் கட்சியுடன் அதனுடன் சேர்ந்து மூழ்கத் தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதோடு இஸ்லாமின் நன்மைக்காகவும் மலாய்க்காரர்களுடைய நன்மைக்காகவும் அம்னோவும், பாஸ் கட்சியும் இணைந்து செயல் பட வேண்டும் என்று முன்னாள் பாஸ் துணைத் தலைவர் நசாருதீன் மாட் ஈஷா தெரிவித்திருந்த கருத்துக்குப் பதிலளித்த ஹாடி அவாங்,

#TamilSchoolmychoice

“தேசிய முன்னணி அரசு மக்களுக்கு எதிராக பாரபட்சத்தோடு நடந்து கொள்கிறது. குறிப்பாக எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் எண்ணெய் உரிமம், வளர்ச்சி நிதி ஆகியவற்றில் தேசிய முன்னணி அரசு மிகவும் பாரபட்சமாக நடந்துகொள்கிறது. இதனால் அம்னோவுடன் இணைவது சாத்தியமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “கட்சிகள் ஒன்றுபடுவது குறித்து அடிக்கடி வேண்டுகோள்கள் விடுக்கப்படுகின்றன. ஆனால் எப்போது இந்த நாட்டில் மற்றவர்களின் கருத்துக்களையும் ஏற்று, மக்களின் உரிமைகள் திருப்பிக் கொடுக்கப்பட்டு, ஒரு முதிர்ந்த அரசியல் நடத்தப்படுகிறதோ அப்போது தான் கட்சிகள் இணைவது குறித்து சிந்திக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.