கோலாலம்பூர், மே 16 – பிரதமர் நஜிப் துன் ரசாக் தலைமையிலான புதிய அமைச்சரவையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் அனைவரும் இன்று காலை இஸ்தானா நெகாராவில் பேரரசர் யாங் டிபெர்துவான் அகோங் துங்கு ஹாலிம் முன் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் முதலாவதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
அவரைத் தொடர்ந்து முதல் குழுவாக, டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அஸீஸ், டத்தோஸ்ரீ ஹிசாமுடின் ஹுசைன், டத்தோஸ்ரீ சபி அப்தால், டத்தோஸ்ரீ முஸ்தபா முகமட் மற்றும் டத்தோஸ்ரீ மேக்ஸிமஸ் ஜோனிட்டி ஒங்கிலி ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
இரண்டாவது குழுவில் டத்தோஸ்ரீ டாக்ளஸ் உங்கா அம்பாஸ், டத்தோஸ்ரீ அகமட் சாகிட் ஹமீடி, டத்தோஸ்ரீ அகமட் ஷாபெரி சீக், டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியம், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யோக்கோப் மற்றும் டத்தோஸ்ரீ அகமட் ஹுசைனி ஹனாட்ஸ்லா ஆகியோர் உறுதிமொழி ஏற்றனர்.
மூன்றாவது குழுவில் டத்தோஸ்ரீ அனிபா அமான், டத்தோஸ்ரீ ஜாமில் கீர் பஹாரோம், டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜாலா, டான்ஸ்ரீ ஜோசப் குரூப், டத்தோ ஜோசப் இந்துலு மற்றும் டத்தோ ரோஹானி அப்துல் கரீம் ஆகியோர் உறுதிமொழி ஏற்றனர்.