கோலாலம்பூர், மே 16 – ‘பீட்டாமெத்தாசோன்’ மற்றும் ‘மெர்க்குரி’ ஆகிய நச்சுப் பொருட்கள் கலந்துள்ளதாகக் கண்டறியப்பட்ட 5 அழகு சாதனப் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று சுகாதார மருத்துவ சேவையின் இயக்குனர் டத்தோ ஈஷா ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ ‘பீட்டாமெத்தாசோன்’ என்ற நச்சுப் பொருள் கொண்ட முக பராமரிப்பு பொருட்களை அதிக நாட்கள் பயன்படுத்தி வந்தால் முகத்தில் அரிப்பு, பருக்கள், தோல் சம்பந்தமான வியாதிகள் ஆகியவை ஏற்பட்டு இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.
இத்தகைய நச்சுப்பொருட்கள் கொண்ட அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 25,000 ரிங்கிட் அபராதமும், மூன்று வருட சிறை தண்டனையும் முதல் தடவை வழங்கப்படும். அதையும் மீறுவோருக்கு 50,000 ரிங்கிட் அபராதமும், 5 வருட சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நச்சுப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஈஷா குறிப்பிட்டுள்ள அந்த 5 அழகு சாதனப்பொருட்களின் பெயர்கள் பின்வருமாறு:-
1.செல்நெக்ஸ் ஆன்டி சென்ஸிடிவிட்டி ட்ரீட்மெண்ட் (Cellnex Anti-Sensitive Essence Treatment),
2.நேட்சுரல் 99 நைட் கிரீம் ( Natural 99 Night Cream),
3.நேட்சுரல் 99 டே கிரீம் (Natural 99 Day Cream),
4.எஸ் எப் பியூட்டி நைட் கிரீம் (பேசியல்) SF Beauty Night Cream (Facial)
5. எஸ் எப் பியூட்டி டே கிரீம் (பேசியல்) SF Beauty Day Cream (Facial).