Home இந்தியா கருணாநிதி 90வது பிறந்ததினத்தை ஒட்டி வீடுகள் தோறும் கொடி ஏற்ற கோரிக்கை

கருணாநிதி 90வது பிறந்ததினத்தை ஒட்டி வீடுகள் தோறும் கொடி ஏற்ற கோரிக்கை

839
0
SHARE
Ad

karunanithiசென்னை, மே 16- “அடுத்த மாதம் 3ம்தேதி தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 90 வது பிறந்ததினத்தை ஒட்டி வீடு தோறும் தி.மு.க.,வினர் கொடியேற்றி கொண்டாட வேண்டும்’ என அக்கட்சியின் பொதுச்செயலர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:-

தமது எழுத்தாலும் பேச்சாலும் அறப்போராட்டங்களாலும் தமிழர்கள் உள்ளத்தில் இடம் பிடித்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 90 வது பிறந்த தினத்தை சமுதாயத்தில் ஒரு புத்துணர்வு பிறக்கும் நாளாக கொண்டாட வேண்டும்.

#TamilSchoolmychoice

உலகத் தமிழர்களின் நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் பெற்றவராக இருப்பவர் கருணாநிதி.

அவரது பிறந்த தினத்தை ஒட்டி  தி.மு.க., கொடிகளை  வீடுதோறும் ஏற்றி கொண்டாட வேண்டும். இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.