Home நாடு “நான் போரை விரும்பவில்லை; உருமாற்றத்தையே விரும்புகிறேன்” – முன்னாள் நீதிபதி விளக்கம்

“நான் போரை விரும்பவில்லை; உருமாற்றத்தையே விரும்புகிறேன்” – முன்னாள் நீதிபதி விளக்கம்

446
0
SHARE
Ad

Untitled-1

கோலாலம்பூர், மே 16 – முன்னாள் நீதிபதி முகமட் நோர் அப்துல்லா, மலாய் அரசியல் அதிகாரம் தொடர்பாக சமீபத்தில் தான் வெளியிட்ட கருத்து குறித்து பலதரப்புக்களிலிருந்து கடும் எதிர்ப்புகள் வந்ததைத் தொடர்ந்து அது பற்றி விளக்கமளித்துள்ளார்.

அதில் தான் போரை விரும்பவில்லை என்றும், மாறாக உருமாற்றம் வேண்டும் என்றே கருத்து கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த வாரத்தில் கருத்தரங்கு ஒன்றில் தான் கூறிய புனிதப்  போர் (jihad) என்ற சொல் போரை விரும்புவது போல் தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டது என்றும் உண்மையில் தான்  தீயவற்றிலிருந்து நல்லனவற்றுக்கு உருமாற்றம் வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் தான் அந்த சொல்லைப் பயன்படுத்தியதாகவும் விளக்கமளித்திருக்கிறார்.

அதோடு எல்லா மலேசியர்கள் மீதும், இனம், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மீதும் தான் அன்பு கொண்டுள்ளதாகவும், நமக்குள் பிரிவினைகள்  ஏற்பட்டு சண்டைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்றே தான் அஞ்சுவதாகவும் நேற்றிரவு பெர்னாமா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹலோ மலேசியா நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

யுஐடிம் மலேசியா பட்டதாரிகள் சங்கமும், தீபகற்ப மலாய் மாணவர் சங்க கூட்டமைப்பின் சார்பாக கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த கருத்தரங்கில் பேசிய  முகம்மட் நோர் அப்துல்லா, “ நம்பிக்கை துரோகம் என்பது மலாய் இனத்தவர்களுக்குப் பிடிக்காத ஒன்று. தங்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்தவர்களை அவர்கள் பழிவாங்க நினைத்தால் அதற்கு முடிவே இல்லாமல் சென்றுவிடும்.” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், 13 ஆவது பொதுத்தேர்தலில் “நம்பிக்கை துரோகம்” இழைத்ததற்காக சீனர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.