Home அரசியல் வேதமூர்த்திக்கு துணையமைச்சர் பதவி வழங்கியதற்கு வேள்பாரி ஆதரவு

வேதமூர்த்திக்கு துணையமைச்சர் பதவி வழங்கியதற்கு வேள்பாரி ஆதரவு

563
0
SHARE
Ad

vel-paariகோலாலம்பூர், மே 16 – ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்திக்கு துணை அமைச்சர் பதவி வழங்கிய பிரதமரின் முடிவுக்கு ம.இ.கா ஆதரவு தெரிவிப்பதோடு, இந்தியர்களுக்கு பிரதமர் நஜிப் முன்னுரிமை கொடுத்திருப்பதாகவும் கூறுகிறது.

இது குறித்து மஇகாவின் வியூக இயக்குனர் எஸ்.வேள்பாரி கூறுகையில், “வேதமூர்த்தி முன்பு பிரதமரின் மீதும், தேசிய முன்னணியின் மீது பல்வேறு எதிர்கருத்துக்களைக் கூறிவந்த போதிலும், அவருக்கு துணையமைச்சர் பதவி வழங்கிய பிரதமரின் முடிவு, இந்திய மக்களின் வளர்ச்சியில் அவர் கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது.

இந்திய மக்களின் பொருளாதார வளர்ச்சி குறித்து பிரதமர் அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவார் என்பதற்கு இந்த ஆதாரம் ஒன்றே போதும்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதோடு அதிக இந்திய சமூதாயத்தைச் சேர்ந்தவர்கள் அரசாங்கப் பதவி வகிப்பது தனக்கு மகிழ்ச்சி என்றும் வேள்பாரி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று வெளியிட்ட புதிய அமைச்சரவைப் பட்டியலின் படி 6 இந்தியர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

அவர்களுள் ம.இ.காவின் தேசியத் தலைவர் ஜி.பழனிவேல் சுற்றுச் சூழல் அமைச்சராகவும்,தேசியத் துணைத்தலைவர் டாக்டர் சுப்ரமணியம் சுகாதார அமைச்சராகவும்,ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி பிரதமர் துறையின் துணையமைச்சராகவும்,ம.இ.காவின் உதவித் தலைவர் டத்தோ எம்.சரவணன்,இளைஞர் விளையாட்டுத் துறையின் துணையமைச்சராகவும், உலுசிலாங்கூர் தொகுதியில் ம.இ.கா, தேசிய முன்னணி சார்பாக போட்டியிட்டு வென்ற கமலநாதன் கல்வி துணையமைச்சராகவும்,பினாங்கு மாநில பிபிபி தலைவரான லோகா பாலமோகன் கூட்டரசுப் பிரதேச விவகார துணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளனர்.