Home அரசியல் “பொதுமக்களுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்” – சுப்ரமணியம் உறுதி

“பொதுமக்களுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்” – சுப்ரமணியம் உறுதி

528
0
SHARE
Ad

Subra-Dr-Feature---1

கோலாலம்பூர், மே 17 – பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தீவிர முயற்சிகளை தான் மேற்கொள்ளப்போவதாக புதிதாக சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்தும், நோய்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதால் எதிர்காலங்களில் பல்வேறு பிரச்சனைகளை தவிர்க்க முடியும். அதோடு சுகாதாரத்தைப் பேணிக் காப்பதற்காக அரசாங்கம் ஆண்டுக்கு10 பில்லியன் ரிங்கிட் முதல் 12 பில்லியன் ரிங்கிட் வரை நிதி ஒதுக்குகிறது என்று சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“நமது நாட்டில் 20 பேரில் 6 பேர் உடல் பருமன் பிரச்சனையாலும், 3 பேர் அதிக எடை பிரச்சனையாலும் அவதிப்படுகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

எனவே மலேசியாவின் சுகாதாரத்தை அனைத்துலக அளவோடு ஒப்பிடும் வகையில் நாட்டிலுள்ள மருத்துவர்களுடன் அணுக்கமான உறவை நீடிக்கப்போகிறேன்.

மக்களுக்கு சிறந்த முறையில் சுகாதாரச் சேவையை வழங்கும் நாடுகளில் ஒன்றாக மலேசிய நாட்டை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

கடந்த 26 ஆண்டு காலம் மருத்துவராக இருந்த எனக்கு மருத்துவத்திலும், அது தொடர்பான விவகாரங்களிலும் நல்ல அனுபவம் உள்ளதால் தொடர்ந்து மலேசிய சுகாதாரத் துறையை சிறந்த முறையில் பேணிக்காப்பேன்.

சுகாதாரத் துறையை நான் சிறப்பாக வழி நடத்துவேன் என்று என் மீது நம்பிக்கை வைத்த பிரதமர் நஜிப்புக்கு நன்றியைக் கூறிக்கொள்கிறேன்” என்று சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.