Home 13வது பொதுத் தேர்தல் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் ஜசெக சார்பாக இருவர் தேர்வு

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் ஜசெக சார்பாக இருவர் தேர்வு

572
0
SHARE
Ad

Teng Chang Khim

ஷா ஆலம், மே 17 – சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களாக ஜசெக சார்பாக டத்தோ டெங் சாங் கிம்(படம் இடது) மற்றும் யான் யோங் ஹியான் வா(படம் வலது) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் மீதமுள்ள இடங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், விரைவில் அது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.Ean Yong Hian Wah

#TamilSchoolmychoice

மேலும், சிலாங்கூர் மாநில சபாநாயகராக இருந்த டெங் விடுத்த வேண்டுகோளையடுத்து அவரை ஆட்சிக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுத்திருப்பதாக லிம் குவான் எங் தெரிவித்தார்.

அதே நேரத்தில் யான் யோங் ஹியான் வா தற்போது இரண்டாவது முறையாக ஆட்சிக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும் லிம் தெரிவித்தார்.

“சிலாங்கூர் மாநில ஜசெக தலைவர் தெரேசா கோக், துணைத்தலைவர் டொனி பாவ் மற்றும் டெங் ஆகியோர் சிலாங்கூர் மாநில அரசாங்கப் பதவிகள் குறித்து விவாதித்து வருகிறார்கள்.

முந்தைய மாநில ஆட்சிக்குழுவில் ஜசெக மற்றும் பாஸ் கட்சி முறையே 3 உறுப்பினர்களையும், பிகேஆர் 4 உறுப்பினர்களையும் கொண்டிருந்தது. ஆனால் இம்முறை அதில் மாற்றங்கள் செய்யப்படலாம் காரணம் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் ஜசெக மற்றும் பாஸ் 15 தொகுதிகளிலும், பிகேஆர் 14 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.” என்றும் லிம் குவான் எங் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய் கிழமை சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக பிகேஆர் கட்சியைச் சேர்ந்த டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.