வாஷிங்டன், மே 18- இந்தியாவின் சண்டிகர் மாநிலத்தில் பிறந்தவர் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் (படம்).
தற்போது அமரிக்காவில் வாழ்ந்து வரும் 46 வயதான இவர், அங்குள்ள உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக விளங்கிய சாண்ட்ரா டே ஓ கானருக்கு உதவியாளராகப் பணிபுரிந்து, பின்னர் நாட்டின் துணை தலைமை வழக்கறிஞராக பணிபுரிகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நீதிமன்றமாகக் கருதப்படும் கொலம்பியா நீதிமன்றத்தின் மேல்முறையீட்டுக்கான நீதிபதியாக ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
18 உறுப்பினர்களைக் கொண்ட செனட்டின் நீதித்துறைக் குழு, அவரை ஏகமனதாக இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளது. ‘சட்டத்துறையின் முன்னோடி‘ என்று ஸ்ரீனிவாசனை பாராட்டியுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஒரு வருடத்திற்கு முன்பே அவரை இந்தப் பதவிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இனி, உறுப்பினர்களின் அனுமதியைப் பெற்றால், இந்தப் பதவியை வகிக்கும் முதல் தெற்கு ஆசிய நாட்டவர் என்ற பெருமையை ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் பெறுவார்.
இரு கட்சிகள் சார்ந்த முறையில் இவரைத் தேர்வு செய்வதன்மூலம், நாம் முன்னோக்கி செல்கின்றோம் என்று நீதித் துறைக் குழுவின் தலைவர் பாட்ரிக் லீகி தெரிவிக்கின்றார்.