Home அரசியல் “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார் ஆவேசம்

“இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார் ஆவேசம்

462
0
SHARE
Ad

MALAYSIA-OPPOSITION-ANWAR-TRIALசிரம்பான், மே 18 – பொதுத்தேர்தல் முடிவுகளில் திருப்தி அடையாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்ற உள்துறையமைச்சரின் கருத்துக்கு எதிர்கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு நெகிரி செம்பிலானில் சுமார் 30,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கறுப்பு 505 பேரணியில் பேசிய அன்வார்,

“ உள்துறை அமைச்சர் சாகிட் கூறுவது ஒட்டுமொத்த மலேசியர்களையும் அவமானப்படுத்துவதைப் போல் உள்ளது. இது அவருடைய அப்பனுடைய நாடு என்று நினைத்து  அவ்வாறு பேசுகிறாரா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் உள்துறையமைச்சர் சாகிட் கூறிய கருத்தை வெளியிட்ட அதே பத்திரிக்கை, அதற்கு மறுநாள் நிதித் துறையின் துணையமைச்சர் அகமட் மஸ்லான் எழுதிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்ததை அன்வார் குறிப்பிட்டார்.

அதில் இந்த நாட்டின் சட்டதிட்டங்களை  பக்காத்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், மொத்த வாக்குகள் விகிதத்தில் தான் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் எனக் கூறிக் கொண்டு மக்கள் மனதில் அதனை ‘திணிக்க வேண்டாம்’ என்றும் மஸ்லான் குறிப்பிட்டிருந்ததை அன்வார் சுட்டிக்காட்டினார்.

‘திணிக்கப்பட்டது’ என்ற சொல்லை மஸ்லான் பயன்படுத்தியிருப்பது மக்களின் விருப்பத்தை அவமதிப்பது போல் உள்ளது என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.