Home இந்தியா சூதாட்ட தொடர்பு நிரூபிக்கப்பட்டால் 3 வீரர்களுக்கு ஆயுள் தடை

சூதாட்ட தொடர்பு நிரூபிக்கப்பட்டால் 3 வீரர்களுக்கு ஆயுள் தடை

627
0
SHARE
Ad

srinivasanசென்னை, மே 20-  கிரிக்கெட் சூதாட்டத்தில் வீரர்கள் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது ஆயுள் தடை விதிக்கப்படும் என கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீத் சவான் மற்றும் 14 தரகர்களை (புக்கிகள்) டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்க, பிசிசிஐயின் (இந்திய கிரிக்கெட் வாரியம்) அவசரக்கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. வாரிய தலைவர் சீனிவாசன் ( படம்) தலைமை தாங்கினார். பின்னர், பிசிசிஐ தலைவர் சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-

#TamilSchoolmychoice

தற்போது எழுந்துள்ள சூதாட்ட புகார் குறித்து விசாரிக்க, பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் ரவி சனானி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் அறிக்கை வந்த பிறகு வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும். வீரர்கள் தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம்.

சர்ச்சையில் சிக்கியுள்ள ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சாண்டிலாவுக்கு எதிராக போலீசில் புகார் தர ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக எங்களிடம் தெரிவித்துள்ளனர்.

இனி வரும் காலங்களில் ஒவ்வொரு ஐபிஎல் அணியிலும் ஊழல் தடுப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். சூதாட்ட தரகர்களை பிசிசிஐ கட்டுப்படுத்த இயலாது. சர்வதேச கிரிக்கெட் சங்க ஊழல் தடுப்பு பிரிவால் போலீசை போல் எல்லா தகவலையும் சேகரிக்க முடியாது.

எல்லா சூதாட்ட தரகர்களையும் கண்காணித்து கட்டுப்படுத்த எங்களால் முடியாது. இதற்கு பிசிசிஐக்கு அதிகாரம் இல்லை. இவர்களை கண்காணிக்க நாங்கள் போலீசும் இல்லை.

ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் நடத்தையையும் கண்காணித்து இது போன்ற முறைகேடுகள் எதிர்காலத்தில் நிகழாதபடி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐபிஎல் அணிகளை சேர்ந்த வீரர்களின் ஏஜென்டுகள் பிசிசிஐயின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள். இவ்வாறு சீனிவாசன் கூறினார்.

சூதாட்ட புகாரில் சிக்கிய 3 வீரர்கள் மீது ஆயுள்தடை விதிக்கப்படுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘சூதாட்ட தொடர்பு நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சீனிவாசன் கூறினார்.