Home அரசியல் தேர்தல் தேதி கேட்டு தொல்லைப்படுத்த வேண்டாம் – பிரதமர்

தேர்தல் தேதி கேட்டு தொல்லைப்படுத்த வேண்டாம் – பிரதமர்

631
0
SHARE
Ad

Najib-2---Sliderகோலாலம்பூர்,பிப்.3-தேர்தல் எப்போது என்பது ஒரு மர்மாகவே இருக்கிறது. பொதுத் தேர்தல் எப்போது என்பதைச் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம் முடிவடைந்து அறிவிக்காது போனால், சட்டமன்றத்தைக் கலைக்கப்போவதாக சிலாங்கூர் அரசு மிரட்டியுள்ள போதிலும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அது பற்றி வாய் திறக்கவில்லை.

“எனக்குத் தொந்தரவு கொடுக்க.வேண்டாம். (சீனப்புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான) சாப் கோ மே-க்குப் பிறகு சட்டமன்றத்தைக் கலைக்கப்போவதாக சொல்வதெல்லாம் தேவையற்றது”, என் இன்று ஒரு கூட்டத்தில் உரையாற்றியபோது நஜிப் கூறினார்.

“எதற்கு இந்த வீண் தொந்தரவு. பேரரசரை எப்போது பார்த்து நாடாளுமன்ற கலைப்புக்கு அனுமதி கேட்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும்.”

#TamilSchoolmychoice

“அதற்கு நேரம் விரைவில் வரும், இப்போதைக்கு 2013 பட்ஜெட்டை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். சரிதானே?”, என்றவர் ஒரு வினாவைப் போட்டதும் கூட்டத்தினர் “ஆம்” என்று பேரொலி எழுப்பினர்.

அம்பாங்கில்  பிஆர்1எம் 2.0 உதவித் திட்டத்தின்கீழ் 5,000 பேருக்கு 500 ரிங்கிட் கொடுக்கும் நிகழ்வில் நஜிப் உரையாற்றினார்.

பிப்ரவரி10-இல், சீனப் புத்தாண்டு. பிப்ரவரி 25-இல் சாப் கோ மே. நாடாளுமன்றம் ஏப்ரல் 28-வரை இருக்கும். அதன்பின்னர் இயல்பாகவே கலைந்து விடும். கலைக்கப்பட்ட 60 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தாக வேண்டும்.