Home அரசியல் எப்படி முறையாக நிர்வாகம் செய்வது என்பதை நாங்கள் தே.மு.க்கு காட்டுவோம்

எப்படி முறையாக நிர்வாகம் செய்வது என்பதை நாங்கள் தே.மு.க்கு காட்டுவோம்

1302
0
SHARE
Ad

கோலாலம்பூர்,பிப்.2-Khalid-Tan-Sri-Sliderமக்கள் அடுத்த பொதுத் தேர்தலில் நிர்வாக மாற்றத்துக்கு வாக்களித்தால் நாட்டை எப்படி முறையாக நிர்வாகம் செய்வது என்பது குறித்து தேசிய முன்னணிக்கு காட்ட தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராஹிம் கூறுகிறார்.

தேசிய முன்னணி நடத்தும் அரசாங்கம் நாட்டை குளறுபடியான முறையில் நாட்டை நிர்வாகம் செய்து வருவதால் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை பெருமளவுக்கு அதிகரித்து விட்டது என அவர் சொன்னார்.

தேசிய முன்னணி கொள்கைகள் நாட்டு நலனைக் கருத்தில் கொள்ளாமல் அந்தக் கூட்டணியும் அதன் சேவகர்களும் ஆதாயமடைவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன என்றார் காலிட்.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்த பின்னரும் மக்கள் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. தேசிய முன்னணி மேலும் ஆட்சி புரிய அனுமதிக்கப்பட்டால் சூழ்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

“மக்கள் நலன்களைக் கவனிப்பதற்கும் வர்த்தகத்துக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அம்னோ/தேசிய முன்னணி உணர்வே இல்லை. ”

“நாட்டிடம் போதுமான பணம் இல்லாததற்கான காரணங்களில் அதுவும் ஒன்றாகும். திட்டங்களை முறையாக நிர்வாகம் செய்யாததால் அரசாங்கம் பற்றாக்குறையான வரவு செலவுத் திட்டத்தை அறிவிக்கிறது.”

சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் தோட்டப்புறப் பிள்ளைகளுக்கான பள்ளிக்கூட தங்கும் விடுதி தொடக்கவிழாவில் காலிட் பேசினார். “பக்காத்தான் மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது, அதன் அரசாங்கங்கள் வெளிப்படையாக இயங்குகின்றன” என்றும் அவர் கூறினார்.

“மாநில அரசாங்கம் எடுத்துக் கொண்டதும் தண்ணீர் கட்டணம் மலிவாக இருக்கும்’

சிலாங்கூரில் நீர் வள நிர்வாகத்திலும் பக்காத்தான் கவனமாக நடந்து கொள்ளும் என்றும் காலித் உறுதி அளித்தார்.

தேசிய முன்னணி சேவகர்களுக்கு ஆதாயமாக இருக்க வேண்டும் என்பதற்காக கூட்டரசு அரசாங்கம் தண்ணீர் கட்டணத்தை அதிகரிக்க விரும்புகிறது என்றும் காலிட் கூறினார்.

“சிலாங்கூர் பக்காத்தான் அரசாங்கம் நீர் வள நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டால் முன்னைக்காட்டிலும் தண்ணீர் கட்டணம் குறைவாக இருக்கும் என நான் வாக்குறுதி அளிக்கிறேன்.”

“ஏனெனில் மக்கள் நலனையும் வர்த்தகத்தையும் வேறுபடுத்த அதற்குத் தெரியும்.”

சிலாங்கூர் நிர்வாகத்தைப் பக்காத்தான் ஏற்றுக் கொண்ட பின்னர் அது ஒவ்வொரு வீட்டுக்கும் 20 ரிங்கிட் தண்ணீரை இலவசமாக வழங்கி வருகின்றது.

“நஜிப் அரசாங்கம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் அதுவாகும்.”

மக்கள் நலனுக்கும் ஆதாயத்துக்காக வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் இடையில் வேறுபாட்டைஅறிந்துள்ளதால் பக்காத்தான் ராக்யாட் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது என்றும் அவர் சொன்னார்.

“மாற்றம் ஏற்பட்டால் நடப்புப் பிரதமர் எங்களிடமிருந்து அதனைக் கற்றுக் கொள்ள முடியும்.”

விவேக  கைத்தொலைபேசிகளை இளைஞர்கள் வாங்குவதற்கு 200 ரிங்கிட் கழிவு கொடுக்கும் கூட்டரசு அரசாங்க நடவடிக்கையை காலிட் எடுத்துக்காட்டாகக் காட்டினார்.

அத்தகைய திட்டங்கள் சில வர்த்தகங்களுக்கு மட்டுமே நன்மையைத் தரும் என அவர் கூறினார்.