Home நாடு ஒற்றுமைப் பொங்கல் விழாவுக்கு 50 ஆயிரம் பேர் திரண்டனர்.

ஒற்றுமைப் பொங்கல் விழாவுக்கு 50 ஆயிரம் பேர் திரண்டனர்.

1102
0
SHARE
Ad

Ponggalகோலாலம்பூர், பிப்ரவரி 2 – ஏராளமான பொருட் செலவுடனும், விரிவான விளம்பரங்களுடனும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஒற்றுமைப் பொங்கல் விழாவிற்கு நாடு முழுமையிலும் இருந்து ஏறத்தாழ 50 ஆயிரம் இந்தியர்கள் தலைநகரின் மையமான டத்தாரான் மெர்டேக்காவில் குழுமியுள்ளனர்.

ம.இ.காவின் தேசிய உதவித் தலைவரும், கூட்டரசுப் பிரதேச துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த பொங்கல் விழா கலைநிகழ்ச்சிகளுடனும், அலங்கார வாகன ஊர்வலங்களுடனும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. விழாவின் உச்சகட்டமாக வாண வேடிக்கைகளும் நடைபெறும்.

ஆஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சி அலைவரிசையில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்படுவதால் நாடு முழுமையிலும் இலட்சக்கணக்கான இந்தியர்கள் இந்த ஒற்றுமைப் பொங்கல் விழா நிகழ்ச்சிகளை தற்போது கண்டு களித்துக் கொண்டிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

பொதுத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் மாபெரும் இந்தியர் நிகழ்ச்சி இது என்பதால் இந்த  அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் நஜிப் இந்திய சமுதாயத்திற்காக சில முக்கிய அறிவிப்புக்களைச் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அவருடன் பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சோரும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், முன்னாள் தேசியத் தலைவர் சாமிவேலு, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம், பண்பாட்டுத் துறை அமைச்சர் ராய்ஸ் யாத்திம், மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

வெளியூர்களிலிருந்து ம.இ.கா ஆதரவாளர்களும், நிகழ்ச்சியை காண வந்தவர்களுமாக ஏராளமானோர் பேருந்துகளில் வந்து குழுமியிருக்கினர்.

இந்த நிகழ்வுக்கு ஏறத்தாழ 30 லட்சம் ரிங்கிட் வரை செலவிடப்பட்டிருப்பதாக தகவல்கள்  கூறுகின்றன.