Home நாடு டத்தோ சோசிலாவதி கொலை வழக்கில் தீர்ப்பு! கொலையாளிகள் நால்வருக்கும் மரண தண்டனை

டத்தோ சோசிலாவதி கொலை வழக்கில் தீர்ப்பு! கொலையாளிகள் நால்வருக்கும் மரண தண்டனை

480
0
SHARE
Ad

sosilawatiஷா ஆலம், மே 23 – நாடெங்கிலும் மிகவும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய பிரபல அழகு சாதனத் தொழிலதிபர் டத்தோ சோசிலாவதியுடன் சேர்த்து மூவர்  கொலை செய்யப்பட்டதற்கான வழக்கு விசாரணையில் இன்று உயர்நீதி மன்றத்தில் கொலையாளிகள் நால்வருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பிரபல அழகு சாதன தொழிலதிபர் டத்தோ சோசிலாவதி(வயது 47 ) மற்றும் அவரது வாகன ஓட்டுநர் கமாருடின், வங்கி அதிகாரி நோர் ஹிஷாம், வழக்கறிஞர் அகமட் காமீல் ஆகிய நால்வரும் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதி மன்றத்தில், கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  4 ஆம் தேதி தொடங்கி இவ்வாண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி வரை நீடித்தது.

கடந்த வாரம் முதல் இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதத் தொகுப்புகள் எழுத்துப்பூர்வமாகவும், வாய் மொழியாகவும் நீதிபதி டத்தோ ஹாஜி அக்தார் தாஹீர் முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று உயர்நீதி மன்றத்தில் நடந்த அவ்வழக்கு தொடர்பான இறுதித் தீர்ப்பில், கொலையாளிகள் நால்வருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி, இரவு 8.30 மணிக்கும், 9.45 மணிக்கு இடையே சோசிலாவதியோடு சேர்த்து மற்ற மூவரையும் பந்திங் தஞ்சோங் சிப்பாட், லாடாங் காடோங் பண்ணை வீட்டில் வைத்து படுகொலை செய்ததாக முன்னாள் வழக்கறிஞர் பத்மநாபன் (வயது 44), தில்லையழகன் (வயது 22), மதன் (வயது 23), காத்தவராயன் (வயது 33) ஆகிய நால்வரின் மீது குற்றம் சாட்டப்பட்டது.