Home நாடு “குடும்பத்தில் மூன்றாண்டுகளாக நிலவி வந்த கவலையை இன்றைய தீர்ப்பு போக்கியது” – சோசிலாவதியின் மகள்

“குடும்பத்தில் மூன்றாண்டுகளாக நிலவி வந்த கவலையை இன்றைய தீர்ப்பு போக்கியது” – சோசிலாவதியின் மகள்

818
0
SHARE
Ad

Yulianaகோலாலம்பூர், மே 23 – தனது தாய் சோசிலாவதி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையில் இன்று கொலையாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவரது மகள் எர்னி டெக்ரிடாவதி யூலியானா புகாரி(படம்), தங்களது குடும்பத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவி வந்த அமைதியின்மையையும், கவலையையும் இன்றைய தீர்ப்பு போக்கி விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும் போது போதிய மன விலிமையின்றி வெளியே சென்று விட்டதாகவும், பிறகு தீர்ப்பு பற்றி தெரிந்தவுடன் தான் நிம்மதியடைந்தாகவும் எர்னி தெரிவித்துள்ளார்.

அதோடு தனது தாயைக் கொன்றவர்களுக்கு மலேசிய நீதிமன்றத்தில் சரியான தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று கூரிய எர்னி, தங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சோசிலாவதி கொலை செய்யப்பட்டபோது அவரோடு சேர்த்து 3 பேர் கொலைசெய்யப்பட்டனர். அவர்களுள் வங்கி அதிகாரியான வங்கி அதிகாரி நோர் ஹிஷாமின் மனைவி சுசானா ராடின் உயர்நீதிமன்றத் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறேன். என் கணவரின் கொலைக்கு சரியான நீதி கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.