Home நாடு சோசிலாவதி கொலை வழக்கு: மே 18-ல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை

சோசிலாவதி கொலை வழக்கு: மே 18-ல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை

509
0
SHARE
Ad

dato sosilawatiபுத்ராஜெயா, பிப்ரவரி 10 – சோசிலாவதி கொலை வழக்கில் எதிர்வரும் மே 18ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள முன்னாள் வழக்கறிஞர் மற்றும் அவரது ஊழியர்கள் 3 பேரும் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

டத்தோ அசீசா அலி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு மே 18ஆம் தேதி இந்த மனுக்களை விசாரிக்க உள்ளது. இதையடுத்து அரசுத் தரப்பும், மனுதாரர்கள் தரப்பும் தங்களது எழுத்துப்பூர்வமான வாத விளக்கங்களை ஏப்ரல் 27ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என டத்தோ அசீசா அலி உத்தரவிட்டார்.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நான்காவது மனுதாரரான காத்தவராயன் சார்பில் இதுவரை முன்னிலையாகி வந்த ரோசல் அசிமின் அகமட் திங்கட்கிழமை முதல் வழக்கில் இருந்து விலகிக்கொள்ள தன்னை அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

#TamilSchoolmychoice

நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே தாம் காத்தவராயனை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டதாகவும், தற்போது காத்தவராயனே தமக்காக வழக்கறிஞரை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோடீஸ்வரரான சோசிலாவதி (47 வயது) மற்றும் அவரது கார் ஓட்டுநர் கமாருடின் சம்சுதின் (44 வயது), வங்கி அதிகாரி நூர் ஹிஷாம் முகமட் (38 வயது), வழக்கறிஞர் அப்துல் கரிம் (32 வயது) ஆகியோர் கடந்த 2010ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தொடர்பில் கடந்த 2013, மே 23ஆம் தேதி பத்மநாபன் (45 வயது), தில்லையழகன் (23 வயது), மதன் (24 வயது), காத்தவராயன் (35 வயது) ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து ஷா ஆலம் உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணை முடிவில், நில விவகாரம் காரணமாக சோசீலாவதி படுகொலை செய்யப்பட்டதாக அறிவித்து, குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி டத்தோ அக்தார் தாகிர் உத்தரவிட்டார். இதையடுத்து நால்வரும் மேல்முறையீடு செய்துள்ளனர்.