Home அரசியல் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு 1 லட்சம் ரிங்கிட் மான்யம் – பழனிவேல் அறிவிப்பு!

தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு 1 லட்சம் ரிங்கிட் மான்யம் – பழனிவேல் அறிவிப்பு!

583
0
SHARE
Ad

Tamil-writers-assoc.-featureகோலாலம்பூர், மே 26 – இன்று தலைநகரில் நடைபெற்ற மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், சங்கத்தின் நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் ஒரு லட்சம் மான்யம் ஒதுக்கியுள்ளதாகவும், ஆண்டுக் கூட்டத்திற்காக 20,000 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இயற்கை வளம், சுற்றுச் சூழல் அமைச்சருமான பழனிவேல், மலாய் இலக்கியத்திற்கும், மொழிக்கும் டேவான் பகாசா டான் புஸ்தாக்கா என்ற அமைப்பு இருப்பது போல், தமிழுக்கும் ஓர் அமைப்பு 20 லட்சம் ரிங்கிட் செலவில் அமைக்கப்பட அரசாங்கத்திடம் முன்மொழியப்பட்டிருப்பதாகவும் மேலும்  தெரிவித்தார்.

ம.இ.காவின் பல்வேறு துணைக்குழுக்களில் ஒன்றாக தமிழ் இலக்கியக் குழு ஒன்றும் அமைக்கப்பட வேண்டும் என எழுத்தாளர் சங்கம் முன்மொழிந்திருப்பதாகவும், பொதுத் தேர்தல் மற்றும் அரசியல் விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால், அதனை இதுவரை செயல்படுத்த முடியவில்லை என்றும் பழனிவேல் கூறினார்.

இருப்பினும், அடுத்த ம.இ.கா தேசிய மாநாட்டிற்குப் பின்னர், இத்தகைய ஒரு துணைக் குழுவை அமைப்பதற்கு தான் ஆவன செய்யவிருப்பதாகவும் பழனிவேல் தனது உரையில் கூறினார்.

பின்னர், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தால் பல்வேறு விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த எழுத்தாளர்களுக்கு பழனிவேல் பொன்னாடை போர்த்தி, பரிசளித்து கௌரவித்தார்.

படவிளக்கம்: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் விருது பெற்ற எழுத்தாளர் பூ.அருணாசலத்திற்கு ஜி.பழனிவேல் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கின்றார். அருகில் சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரன்.