Home நாடு ‘கறுப்பு 505’ பேரணி தொடர்பில் பினாங்கு பக்காத்தான் செயலாளர் மீது வழக்கு

‘கறுப்பு 505’ பேரணி தொடர்பில் பினாங்கு பக்காத்தான் செயலாளர் மீது வழக்கு

652
0
SHARE
Ad

Untitled-1பட்டர் வொர்த், மே 27 – பத்து கவானில் கடந்த மே 11 ஆம் தேதி கறுப்பு 505 பேரணி நடத்தியது தொடர்பாக பினாங்கு மாநில பக்காத்தான் செயலாளர் ஆங் யூ லியாங் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். பேரணி நடத்துவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி அவர் மீது பொது இடத்தில் ஆர்ப்பாட்டம் பிரிவு 9(1) என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆங்கின் வழக்கறிஞர் ஆர் எஸ் என் ரேயர் தனது கட்சிக்காரர் கைது செய்யப்படாததால் அவருக்கு பிணை தேவையில்லை அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றத்தில் வாதிட்டார்.

அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட பட்டர் வொர்த் அமர்வு நீதிமன்ற நீதிபதி மியோர் சுலைமான் அகமட் டார்மிஸி, ஆங்கை பிணையின்றி விடுவித்து வருகிற ஜூன் மாதம் 27 ஆம் தேதி இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பிகேஆரின் முழு நேர உறுப்பினரான ஆங் இது குறித்து கருத்துரைக்கையில், “இந்த வழக்கை சட்டப்படி எதிர்க்கொள்வோம். மக்கள் நீதி கேட்டு அமைதியான முறையில் கூடுவதை அதிகார வர்க்கத்தினரால் தடுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.