Home அரசியல் மலாக்காவின் பொருளாதார ஆலோசனை குழுத் தலைவராக அலி ருஷ்தாம் நியமனம்

மலாக்காவின் பொருளாதார ஆலோசனை குழுத் தலைவராக அலி ருஷ்தாம் நியமனம்

532
0
SHARE
Ad

ali-rustamமலாக்கா, மே 30 –  மலாக்கா மாநில முன்னாள் முதலமைச்சரான டத்தோஸ்ரீ முகமட் அலி ருஷ்தாம், அம்மாநில பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மலாக்கா மாநில தற்போதைய முதலமைச்சரான டத்தோ இட்ரிஸ் ஹாரோன் கூறுகையில், “முகமட் அலி தனது அனுபவத்தின் மூலம் மலாக்காவின் பொருளாதார வளர்ச்சியை மென்மேலும் உயர வழிவகுப்பார் என்று நம்பிக்கை உள்ளது.

முகமட் அலியின் நியமனம் குறித்து மாநில வாராந்திர செயற் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

பொருளாதார ஆலோசனை குழுவில் 7 முதல் 20 பேர் வரை இடம்பெறுவார்கள். அவர்கள் மலாக்காவைச் சேர்ந்த அரசாங்க துறை தலைவர்கள், குறிப்பாக முன்னாள் முக்கிய அரசு ஊழியர்களாக இருப்பார்கள்.

மாநிலத்தில் தொடங்கப்படும் பெரிய திட்டங்கள் அனைத்தையும் மதிப்பீடு செய்யும் அளவிற்கு திறமையானவர்களாக விளங்குவார்கள்.காரணம் இந்த புதிய குழுவில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அனைவரும் பொருளாதாரம் மற்றும் தொழில் துறையில் வல்லுனர்கள்” என்று தெரிவித்துள்ளார்.