Home இந்தியா திமுகவை யாரும் வீழ்த்திவிட முடியாது

திமுகவை யாரும் வீழ்த்திவிட முடியாது

712
0
SHARE
Ad

karunanithiசென்னை, மே 30- திமுகவை யாரும் வீழ்த்திவிட முடியாது என்று கருணாநிதி பேசினார்.

திமுக முன்னாள் எம்எல்ஏ கும்மிடிப்பூண்டி கி.வேணு பேத்தியும் செந்தில்குமார் விதுபாலா தம்பதி மகளுமான தமிழரசிக்கும், மணிகண்டனுக்கும் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங் கில் திருமணம் நடந்தது.

திமுக தலைவர் கருணாநிதி, திருமணத்தை நடத்தி வைத்தார். பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். மணமக்களை வாழ்த்தி கருணாநிதி பேசியதாவது:-

#TamilSchoolmychoice

கும்மிடிப்பூண்டி வேணு திமுக தொண்டனாக, என் தம்பிகளில் ஒருவராக மாத்திரமல்ல, இந்த இயக்கத்திற்கு ஊன்றுகோலாக, தூணாக, உத்திரமாக இருக்கும் வலிமை வாய்ந்த நெஞ்சுரம் கொண்டவர்.

வேணு போன்ற வீரர்கள், பட்டாளத்து சிப்பாய்கள் இருக்கிற வரையில் எனக்கு எந்தப் பயமும் இல்லை, திமுகவை யாரும் வீழ்த்தி விட முடியாது.

கோட்டையாக திருவள்ளூர் மாவட்டத்தை ஆக்கி வைத்திருக்கிறேன் என்று வேணு குறிப்பிட்டார். கோட்டைக்குள் குள்ளநரிகள் நுழைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  காளையர்களில் ஒருவராக இருந்து, நான் அறிந்த காலந்தொட்டு இதுவரை இம்மியளவும் கொள்கை க்கு விரோதமில்லாமல் நடைபோட்டுக் கொண்டிருக்கிற தம்பிகளை வரிசைப்படுத்தினால், அந்த வரிசையில் முதன்மையாக நிற்பவர் வேணு.

அந்த வழியில் அனைவரும் வேணு போன்றவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண்டும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, க.சுந்தரம், கே.பி.பி.சாமி, திமுக சட்ட துறை செயலா ளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். கி.வேணு நன்றி கூறினார்.முன்னதாக கோபாலபுரம் இல்லத்தில் தஞ்சை தமிழ் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் ம.ராசேந்திரன் மகள் தென்றல் & கருணாகரன் திருமணத்தை கருணாநிதி நடத்தி வைத்தார்.