Home கலை உலகம் பிரபல திரைப்பட இயக்குனர் ரிதுபர்னோ கோஷ் மாரடைப்பால் மரணம்

பிரபல திரைப்பட இயக்குனர் ரிதுபர்னோ கோஷ் மாரடைப்பால் மரணம்

598
0
SHARE
Ad

DIRECTORமே 30- பிரபல சினிமா தயாரிப்பாளர், இயக்குனர் ரிதுபர்னோ கோஷ். வங்க மொழியில் அதிக படங்கள் இயக்கிய இவர் இன்று காலை 7.30 மணிக்கு மாரடைப்பு காரணமாக தெற்கு கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். அவருக்கு வயது 49.

1994-ல் ‘ஹிரேர் அங்டி’ என்ற வங்கமொழி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை துவக்கினார் ரிதுபர்னோ கோஷ்.

அடுத்து அவர் இயக்கிய ‘உனிஷே ஏப்ரல்’ என்ற படத்திற்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது கிடைத்தது. இதுவரை அவர் இயக்கிய 19 படங்களில் 16 படங்கள் 19 தேசிய விருதுகளை பெற்றுள்ளன. இயக்கம், தயாரிப்பு மட்டுமல்லாது 4 படங்களில் நடித்தும் உள்ளார்.

#TamilSchoolmychoice

தன்னுடைய 49-வது வயதில் ரிதுபர்னோ கோஷ் மரணமடைந்துள்ளது இந்திய திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் பெரும்பாலும் வங்க மொழியில் படங்களை உருவாக்கினாலும் அவர் இயக்கிய படங்களின் தாக்கம் இந்தியா முழுவதும் பரவியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிதுபர்னோ கோஷ் கொல்கத்தாவில் 1963-ம் தேதி பிறந்தார். இவரது தந்தை டாக்குமென்டரி படங்களை இயக்கியவர். தாயாரும் திரைத்துறையைச் சேர்ந்தவரே.