டோக்கியோ, மே 30- பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 27-ம் தேதி 3 நாள் அரசு முறைப்பயணமாக ஜப்பான் சென்றார். இந்த பயணத்தின் போது இந்தியா-ஜப்பான் நாடுகளுகிடையே பல ஒப்பந்தங்கள் கையேழுத்தாகின.
இந்த பயணத்தை முடித்துக் கொண்டு, மன்மோகன் சிங் இன்று டோக்கியோவிலிருந்து தாய்லாந்து புறப்பட்டார். ஒரு நாள் சுற்றுப்பயணமாக செல்லும் அவருடன் உயர் மட்டக்குழுவும் பயணிக்கிறது.
இந்த பயணத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங், தாய்லாந்தின் பிரதமர் இங்லக் சினவட்ரா-வை சந்திக்கிறார். அப்போது, தகவல் தொழில்நுட்பம், கல்வி, பணமோசடியை கட்டுப்படுத்த ‘நிதி புலனாய்வு பிரிவு’ அமைப்பது, கைதிகள் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, தாய்லாந்து மற்றும் மியான்மர் நாடுகளை இணைக்கும் நெடுஞ்சாலை அமைத்தல், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்தும் பிரதமர் பேச்சு வார்தைகள் நடத்த உள்ளார்.