Home இந்தியா அண்ணாவின் செயலாளர் மரணம்- கருணாநிதி இரங்கல்

அண்ணாவின் செயலாளர் மரணம்- கருணாநிதி இரங்கல்

590
0
SHARE
Ad

karunanithiசென்னை, மே 30- தி.மு.க. தலைவர் கருணாநிதி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

பேரறிஞர் அண்ணா 1967-ஆம் ஆண்டு தமிழகத்தில் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற போது, முதல்-அமைச்சரின் தனிச் செயலாளராக யாரை நியமிப்பது என்ற பிரச்சினை எழுந்த போது, தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டவர் தான் சொக்கலிங்கம், ஐ.ஏ.எஸ்.

அதன் பின்னர் தமிழக அரசின் தலைமைச் செயலாளராகவும் பொறுப்பேற்று திறம்பட பணியாற்றினார். வாழ்நாள் முழுதும் சுயமரியாதை குணத்தோடும், இன உணர்வோடும் வாழ்ந்தவர்.

#TamilSchoolmychoice

ஓய்வு பெற்ற பிறகு, அமெரிக்காவில் பணியாற்றிய தனது மகன்களுடன் சென்று வாழ்ந்து வந்தவர் தனது 90-வது வயதில் அங்கேயே மறைந்து விட்டார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

சொக்கலிங்கம் மறைவால் வருந்துகின்ற அவருடைய துணைவியார், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.