Home உலகம் அமெரிக்க ஆங்கில எழுத்தறிவு போட்டி: இந்திய வம்சாவழி மாணவன் முதலிடம் வென்று சாதனை

அமெரிக்க ஆங்கில எழுத்தறிவு போட்டி: இந்திய வம்சாவழி மாணவன் முதலிடம் வென்று சாதனை

1256
0
SHARE
Ad

arv-ind

வாஷிங்டன், மே 31-அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் லாப நோக்க மற்ற அமைப்பு ஆங்கில எழுத்தறிவுப் போட்டியை நடத்துகிறது.

‘ஸ்கிரிப்ஸ் ஸ்பெல்லிங் பீ ‘ என்ற இந்த போட்டிகளில் இந்த ஆண்டு அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இருந்து வந்த 281 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

இதன் இறுதிப்போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்க வாழ் இந்திய மாணவர் அரவிந்(13) வெற்றிபெற்றார். அறிவியலிலும் கணிதத்திலும் ஆர்வம் கொண்ட இவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். எதிர்காலத்தில் இயற்பியல் துறையில் வல்லுனராக விருப்பம் தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த 3 ஆண்டுகள் நடைபெற்ற போட்டிகளிலும் கலந்து கொண்டார். அதில் 2011 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் 3 வது இடத்தைப் பிடித்தார்.

இந்த போட்டிகளில் கடந்த 6 ஆண்டகளாக அமெரிக்க வாழ் இந்திய மாணவர்களே முதலிடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.