Home அரசியல் அன்வார், லிம் கிட் சியாங் சபாவில் நுழையத் தடை!

அன்வார், லிம் கிட் சியாங் சபாவில் நுழையத் தடை!

398
0
SHARE
Ad

Lim Kit Siangகோலாலம்பூர், ஜூன் 3 – சபாவில் நுழையத் தடை செய்யப்பட்ட எதிர்கட்சித் தலைவர்களின் பட்டியலில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இத்தகவலை லிம் கிட் சியாங் தனது டிவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் “சபாவில் நுழையத் தடைவிதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் எனது பெயரும் உள்ளது தெரியவந்துள்ளது. சபா முதலமைச்சர் மூசா அமானின் உத்திரவின் பேரில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அப்பட்டியலில் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றிருப்பதாகவும் லிம் கிட் சியாங் குறிப்பிட்டுள்ளார்.