Home கலை உலகம் இயக்குனர் சங்க தலைவர் பதவி: விசு, விக்ரமன் போட்டி

இயக்குனர் சங்க தலைவர் பதவி: விசு, விக்ரமன் போட்டி

620
0
SHARE
Ad

VISUஜூன் 3- தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

தலைவர் பதவிக்கு விக்ரமன், விசு ஆகியோர் போட்டியிடுகின்றனர். பொதுச்செயலாளர் பதவிக்கு ஆர்.கே. செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். பொருளாளர் பதவிக்கு வி.சேகர், ஜெகதீசன், எல்லையப்பன் ஆகிய 4 பேர் மோதுகிறார்கள்.

துணைத் தலைவர்களாக இருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த பதவிக்கு பி.வாசு, மங்கைஅரிராஜன், அரவிந்தராஜ், கே.எஸ். ரவிகுமார், மனோராமச் சந்திரன் ஆகியோர் மோதுகின்றனர். 3 இணை செயலாளர்கள் பதவிக்கு என்.லிங்குசாமி, பேரரசு உள்பட 20 பேர் மோதுகிறார்கள்.

#TamilSchoolmychoice

டி.பி. கஜேந்திரன், ஆர்.மாதேஷ், ரவிமரியா, மாரிமுத்து ரமேஷ்கண்ணா, கண்ணன், மதுமிதா, மணிவண்ணன், மனோபாலா உள்பட 33 பேர் 12 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இயக்குனர் சங்கத்தில் தற்போது தலைவராக உள்ள பாரதிராஜா மீண்டும் போட்டியிடவில்லை.