சென்னை – தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக இரண்டாகப் பிளவு பட்டு ஓபிஎஸ் அணி – விகேஎஸ் அணி என மாறியுள்ள நிலையில், நேற்று இரண்டு பேருமே ஆளுநர் வித்தியாசாகரைச் சந்தித்து தங்களது கோரிக்கைகளை வைத்தனர்.
மாலை 5 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரைச் சந்தித்து தனது கோரிக்கையை வைத்தார். அதன் பின்னர் 7.30 மணியளவில் சசிகலா ஆளுநரைச் சந்தித்து அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்கவும், புதிய அமைச்சரவையை அமைக்கவும் உரிமை கோரினார்.
இந்நிலையில், நடிகர் விசு வெளியிட்டிருக்கும் காணொளி ஒன்றில், மாலை 5 மணியளவில் ஆளுநரைச் சந்தித்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு பஞ்ச பூதங்களும் துணையிருக்கும் என்று தெரிவித்தார். அதே போல், ஏழரை மணிக்கு சசிகலா ஆளுநரைச் சந்திக்கிறார். ஏழரை எதுக்கு சொல்வோம் என்று உங்களே தெரியும் என்றும் விசு குறிப்பிட்டிருக்கிறார்.
அதோடு, தமிழக மக்களின் வாழ்க்கை 135 சட்டமன்ற உறுப்பினர்களின் கைகளில் இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கும் விசு, தயவு செய்து முதல்வர் பதவியை சசிகலாவிடம் கொடுத்துவிட வேண்டாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்தக் காணொளி தற்போது பிரபலமடைந்து வருகின்றது.
அவர் பேசியிருக்கும் காணொளியை இங்கே காணலாம்:-
https://www.youtube.com/watch?v=5MNYuApVpVQ