Home Featured தமிழ் நாடு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கே?- விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கே?- விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

816
0
SHARE
Ad

chennai-high-courtசென்னை – நேற்று வியாழக்கிழமை, ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, தனக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை வழங்கி அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்கவும், புதிய அமைச்சரவையை அமைக்கவும் உரிமை கோரினார்.

அதன் பின்னர், அப்பட்டியலில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஊருக்கு ஒதுக்குப் புறமாக விடுதிகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்தன.

இதனையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்களை மீட்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை இன்று வெள்ளிக்கிழமை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், வரும் திங்கட்கிழமைக்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து தமிழக அரசும், காவல்துறையும் பதிலளிக்கும் படி உத்தரவிட்டுள்ளது.