Home இந்தியா குருநாத் மெய்யப்பனுக்கு 14-ந் தேதி வரை நீதிமன்ற காவல்

குருநாத் மெய்யப்பனுக்கு 14-ந் தேதி வரை நீதிமன்ற காவல்

560
0
SHARE
Ad

meiyappanபுதுடெல்லி, ஜூன் 4-சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பனுக்கு ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை மும்பை போலீசார் கடந்த 23-ந் தேதி கைது செய்தனர்.

சூதாட்ட தரகர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்த இந்தி நடிகர் விண்டூ தாரா சிங்குடன் 150-க்கும் மேற்பட்ட முறை குருநாத் மெய்யப்பன் போனில் பேசி இருந்தார். விண்டூ மூலம் குருநாத் மெய்யப்பன் ஐ.பி.எல். பெட்டிங்கில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் சென்னை அணி பற்றிய விவரங்களை குருநாத் மெய்யப்பன் விண்டூ மூலம் சூதாட்ட தரகர்களுக்கு அறிவித்து இருக்கிறார். கடந்த 10 தினங்களாக மும்பை குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். குருநாத் மெய்யப்பனின் போலீஸ் காவல் இன்றுடன் முடிந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 14-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

#TamilSchoolmychoice

இதை தொடர்ந்து ஆர்தர் ரோட்டில் உள்ள சிறையில் அவரை போலீசார் கொண்டு சென்றனர். மேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகர் விண்டூ மற்றும் 2 சூதாட்ட தரகர்களும் வருகிற 14-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.