Home இந்தியா சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்-க்கு 2 ஆண்டுகள் தடை: குருநாத், ராஜ்குந்த்ராவுக்கு வாழ்நாள் தடை

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்-க்கு 2 ஆண்டுகள் தடை: குருநாத், ராஜ்குந்த்ராவுக்கு வாழ்நாள் தடை

748
0
SHARE
Ad

சென்னை, ஜூலை 14- ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோருக்குக் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான விவகாரங்களில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Meiyappan-Kundra_2472740fசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

23-csk-chennai-super-kings-600

#TamilSchoolmychoice

Evening-Tamil-News-Paper_22176325322

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான நீதிபதிகள் குழு தண்டனை விவரங்களை டெல்லியில் அறிவித்தது.

குருநாத் மெய்யப்பன் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்றும், விளையாட்டின் மீது பற்றுள்ள எவரும் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள் என லோதா குழு தெரிவித்துள்ளது.

தடையா? அப்படியா? என்பதுபோல் ராஜஸ்தான் ராயல் அணி:

ஆனால், இதுகுறித்து இதுவரை சென்னை, ராஜஸ்தான் அணிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள், கருத்துகள் எதுவும் வெளியிடவில்லை.

“சிங்கங்களே நம்பிக்கையுடன் இருங்கள். நாம் மீண்டும் வருவோம். படம் இன்னமும் மீதமுள்ளது” என்று சென்னை ஐபிஎல் அணியின் மருத்துவர் டி.மது டுவிட் செய்ததை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர், மறுபடியும் டுவிட் செய்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணீயினரோ, “தங்களுக்கும் லோதா தீர்ப்புக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல இயங்கிக்கொண்டிருக்கிறது.

இன்று இந்தியா – ஜிம்பாப்வே இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நடப்பதால் அது தொடர்பான செய்திகள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன.

லோதா தீர்ப்பு என்று ஒன்று சொல்லப்பட்டதாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டுவிட்டர் பக்கம் காட்டிக் கொள்ளவேயில்லை.