Home உலகம் ஈரான் ஒப்பந்தம் நம்பிக்கையின் அடிப்படையில் இல்லை – ஒபாமா விளக்கம்!

ஈரான் ஒப்பந்தம் நம்பிக்கையின் அடிப்படையில் இல்லை – ஒபாமா விளக்கம்!

697
0
SHARE
Ad

obamaநியூ யார்க், ஜூலை 14 – ஈரானுடன், அமெரிக்கா வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பது பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானுடனான ஒப்பந்தம் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானின் அணுசக்தி பாதையில் ஆயுதங்கள் தயாரிப்பு, ஒப்பந்தப்படி நிறுத்தப்பட்டுள்ளது. ஈரான் அதன் அணுக்கிடங்கில் இருந்து 98 சதவீத யுரேனியத்தை விடுவித்துள்ளது.”

“இது தொடர்பான சந்தேகங்களை அனைத்துலக சமூகம் தேவைப்பட்டால் விசாரித்துக் கொள்ளலாம். இந்த சிறப்பு மிக்க ஒப்பந்தம் நம்பிக்கையின் அடிப்படையில் இல்லை. சரிபார்த்தலின் அடிப்படையில் தான் ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.