Home இந்தியா குருநாத் மெய்யப்பன் வீட்டில் மும்பை போலீஸ் சோதனை

குருநாத் மெய்யப்பன் வீட்டில் மும்பை போலீஸ் சோதனை

671
0
SHARE
Ad

meiyappanசென்னை, மே 27- ஐ.பி.எல். சூதாட்டப் புகாரில் சிக்கியுள்ள தொழிலதிபர் குருநாத் மெய்யப்பன் (படம்) வீட்டில் மும்பை போலீஸார் 9 மணி நேரம் சோதனை நடத்தினர்.

சென்னை தேனாம்பேட்டை செனடாஃப் சாலை 2-வது தெருவில் உள்ள குருநாத் மெய்யப்பன் வீட்டுக்கு மும்பை போலீûஸ சேர்ந்த 4 அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் வந்தனர்.

தேனாம்பேட்டை போலீஸாரும், 2 தாசில்தாரும், மும்பை போலீஸýக்கு உதவியாக சோதனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. குருநாத் வீட்டின் அனைத்து அறைகளிலும் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.

#TamilSchoolmychoice

முதலாவதாக வீட்டின் சுரங்க அறையை சோதனையிட்ட போலீஸார், பின்பு வீட்டின் முதல் தளத்தில் சோதனை செய்தனர். மேலும் குருநாத் மெய்யப்பன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 கார்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

அவரது குடும்பத்தினர் கோடை விடுமுறைக்காக வெளியூர் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே வீட்டில் இருந்த உதவியாளரின் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6 மணிக்கு முடிந்தது.

இந்தச் சோதனை குறித்த தகவல்களை தெரிவிக்க மும்பை போலீஸார் மறுத்துவிட்டனர். ஆனால் சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வெள்ளிக்கிழமை இரவு மும்பையில் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக மும்பை போலீஸார் கடந்த 23-ஆம் தேதி மெய்யப்பனைத் தேடி சென்னை வந்தனர். அவர் வீட்டில் இல்லாததால் சம்மனை வீட்டில் கொடுத்து சென்றனர்.

பின்பு விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்டு மும்பை போலீஸாருக்கு குருநாத் கடிதம் எழுதினார். ஆனால் மும்பை போலீஸார் கால அவகாசம் கொடுக்கவில்லை.

அதன்பிறகு விசாரணைக்காக குருநாத் மும்பை சென்று போலீஸார் முன் ஆஜரானார். நீண்ட விசாரணைக்குப் பின் அவர் கைது செய்யப்பட்டார்.