Home வாழ் நலம் கறிவேப்பிலை மருத்துவ குணம் கொண்டது

கறிவேப்பிலை மருத்துவ குணம் கொண்டது

547
0
SHARE
Ad
curry-leafகோலாலம்பூர், மே 27- சமையல் சுவையைக் கூட்ட உதவும் கறிவேப்பிலை கடைகளில் காய்கறி வாங்கும் போது கொசுறாகவும் கிடைப்பதாலோ என்னவோ அதன் அருமை பெருமை பலருக்கும் தெரிவதில்லை. உணவுச் செரிமானத்துக்கு ஓர் உன்னதமான பொருளாக விளங்குகிறது கறிவேப்பிலை.

வைட்டமின் ஏ சுண்ணாம்பு சத்து போலிக் ஆசிட் போன்றவை இதில் நிரம்பி உள்ளன. இரும்புச்சத்தை மிகைப்படுத்தி உடலுக்கு உறுதியைக் கொடுக்கிறது.

ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புத்தாது அடர்த்திக் குறைவு நோய் முதுமைப் பருவத்தில் வருவதைத் தடுக்கிறது.

கெட்ட கொழுப்பை கரைத்து பட்டழகை கொடுக்கிறது. பூச்சிக்கடி ஒவ்வாமையால் தோலில் ஏற்படும் அரிப்பைத் தணிக்கிறது.இதிலுள்ள பி- கரோட்டீன் உடல் உள் இயக்கத்தை சீர்படுத்துகிறது.

 கண் பார்வை கூர்மைக்கும் தலைமுடி கருகருவென அடர்த்தியாக வளரவும் கறிவேப்பிலை சிறந்த மூலிகை போன்று செய்லபடுகிறது.
இளநரையை கட்டுப்படுத்துகிறது. இதன் இலைகளை அரைத்து தலைக்குத் தேய்க்கும் எண்ணெயில் கலந்து காய்ந்து பயன்படுத்துவதும நல்ல பலனைத் தரும். நீரிழிவுநோய் உள்ளவர்கள் கறிவேப்பிலையை பச்சையாக மென்று தின்றால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.

இலையை காய வைத்து அரைத்து பொடியாக தயார்செய்து தண்ணீரில் கலந்தும் பருகலாம்.

இந்தியாவில் உள்ள சிறந்த மூலிகை வகைகளில் வேப்பிலையுடன் கறிவேப்பிலையும் பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. இதன் பூர்வீகம் தென் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.