Home நாடு தமிழ் நூல்களை வாங்க தேசிய நூலகம் நிதி ஒதுக்கீடு- மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் அறிவிப்பு

தமிழ் நூல்களை வாங்க தேசிய நூலகம் நிதி ஒதுக்கீடு- மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் அறிவிப்பு

808
0
SHARE
Ad

malaysia--1கோலாலம்பூர், ஜூன் 5- உள்நாட்டுத் தமிழ் நூல்களை தேசிய நூலகத்தில் இடம் பெறச் செய்வதற்கு தேசிய நூலகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

2012- 2013 ஆம் ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட நூல்களில் தலா ஐந்து படிவங்களை நூலகத்தில் இடம்பெறச்செய்யுமாறு எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன் கேட்டுக் கொண்டார். மலேசிய தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை வாங்கி தேசிய நூலகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற  கோரிக்கையை தேசிய நூலகத் தலைமை இயக்குநரிடம் சங்கம் சமர்ப்பித்து பேச்சு நடத்தியது.

அதன் அடிப்படையில் நூல்களை வாங்குவதற்காக  நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான கடிதத்தையும் தேசிய நூலகம் அனுப்பியுள்ளது. தமிழ் நூல்களை வாங்குவதற்கு ஐம்பதாயிரம்  வெள்ளியை தேசிய நூலகம் ஒதுக்கியுள்ளது. இந்த அரிய வாய்ப்பை மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

#TamilSchoolmychoice

2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நூல்களைப் பதிப்பித்துள்ளவர்கள் அதில் ஐந்து படிவங்களை எழுத்தாளர் சங்கத்திடம் வழங்க வேண்டும். முன்பு நூலகங்களுக்கு நூல்களை இலவசமாகப் பெறுவதையே வழக்கமாக கொண்டிருந்தார்கள். மற்ற நூல்களை பணம் கொடுத்து வாங்குவது போல்  தமிழ் நூல்களையும் பணம் கொடுத்து வாங்க வேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியது.

rajenthiranகாலம் இப்பொழுது கனிந்து வந்துள்ளது. நமது நூலகளை தேசிய நூலகம் பணம் கொடுத்து வாங்குவது ஒரு புறமிருக்க,  தமிழ் நூல்கள் தேசிய நூலகத்தில் இடம் பெறுவதையும்  இது உறுதிச் செய்யும்  என்று இராஜேந்திரன் (படம்)  குறிப்பிட்டார்.

ஜூன் மாதம்  15ஆம் தேதிக்குள் எழுத்தாளர்கள் தங்களது நூல்களை அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பி வைக்கப்படும் நூல்கள் நூலக ஆய்வுக் குழுவினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டால்  பின்னர் நூற்றுக்கும்  குறையாத படிவங்களை வாங்குவதற்கு வாய்ப்புண்டு. நூலின் விலையை பொறுத்து வாங்கும் புத்தகங்களின் எண்ணிக்கை அமையும்.

தாமதமானால் நூலகத்திடம் ஒப்படைக்கும் பணி சுணங்கிவிடும். நமக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால் எழுத்தாளர்கள் விரைந்து தங்களது நூல்களை அனுப்பி வைக்க வேண்டும்.

நூலின் விலை, தொடர்பு முகவரி, வங்கி கணக்கு எண்கள் ஆகியவை அடங்கிய கடிதத்தையும் நூல்களோடு இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். இந்த முயற்சி வெற்றி பெற்றால், மாநில மாவட்ட நூலகங்களிலும் நமது நூல்கள் இடம்பெறச் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார் இராஜேந்திரன். நூல்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி,

Persatuan Penuli-Penulis Tamil Malaysia,

21B, Jalan Murai Dua, Batu Compleks,

Batu 3, Jalan Ipoh,

51200, Kuala Lumpur.

மேல் விவரங்களுக்கு, 013- 3609989 என்ற எண்களின் வழி தொடர்பு கொள்ளலாம்.