Home உலகம் மைக்கேல் ஜாக்சன் மகள் தற்கொலை முயற்சி – ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

மைக்கேல் ஜாக்சன் மகள் தற்கொலை முயற்சி – ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

544
0
SHARE
Ad

jacson-daughterகலிபோர்னியா, ஜூன் 6- உலகப் புகழ் பெற்ற பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், மிதமிஞ்சிய போதையில் கடந்த 2009ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

மைக்கேல் ஜாக்சனுக்கு மைக்கேல் ஜோசப் ஜாக்சன்( வயது 16), பிரின்ஸ் மைக்கேல் ஜாக்சன்( வயது 11) என்ற இரு மகன்களும் பாரீஸ் மைக்கேல் கேத்தரின் ஜாக்சன்( வயது 15) என்ற மகளும் உள்ளனர்.

மைக்கேல் ஜாக்சனின் கடைசி மகள் பாரிஸ் ஜாக்சன் ( வயது 15) தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக கலிபோர்னியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி, அதிகாலை 1.27 மணியளவில் ‘911’ அவசர உதவி பிரிவுக்கு தகவல் வந்ததாகவும், 2.00 மணியளவில் கலபாசஸ் பகுதியில் இருந்து அவரை அவசர சிகிச்சை வண்டியில்  அழைத்து வந்து மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

நேற்று தனது ‘டிவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த பாரிஸ் ஜாக்சன் (படம்), ‘எனது துன்பங்கள் எல்லாம் என்னை விட்டு நீங்கிவிட்டன என்று நினைத்திருந்தேன்.

ஆனால், அவை இன்னும் என்னை விட்டு விடைபெறவில்லை என தெரிகிறது, கண்ணீர் ஏன் உப்பு தன்மையுடன் உள்ளது? என நான் வியக்கிறேன்’ என்று எழுதியிருந்தார்.

கை மணிக்கட்டை அறுத்துக்கொண்டு பாரிஸ் ஜாக்சன் தற்கொலைக்கு முயன்றதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிதமிஞ்சிய போதையில்  கொண்டு வரப்பட்டதாக மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.