Home கலை உலகம் நடிகை ஜியா கான் இறந்த சோகம் தாங்காமல் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

நடிகை ஜியா கான் இறந்த சோகம் தாங்காமல் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

855
0
SHARE
Ad

JIAH-KHANஜூன் 6- குறுகிய காலத்தில் பாலிவுட்டில் பிரபலமான நடிகை ஜியா கான் நேற்று முன்தினம் இரவு மும்பை ஜூகு பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் எந்த குறிப்பும் எழுதி வைக்காத நிலையில், காதல் பிரச்சினை காரணமாக அவர் தனது உயிரை மாய்த்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அவர் தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பான செய்தி தொகுப்பு, அவர் நடித்த படங்களின் காட்சிகள் ஆகியவை தனியார் டி.வி. சேனல்களில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன.

#TamilSchoolmychoice

இந்த காட்சிகளை ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்கா மாவட்டம், குருநானக் பஸ்தியை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவன், பாபு( வயது 12) கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்று முழுவதும் சோகமாக காணப்பட்ட பாபு, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தளத்தில் உள்ள மின் விசிறி மாட்டும் கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டான்.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவனது உடல் இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.