Home இந்தியா முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலமாக உள்ளார் – வதந்திகளை நம்ப வேண்டாம்: பா.ஜ.க. அறிவிப்பு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலமாக உள்ளார் – வதந்திகளை நம்ப வேண்டாம்: பா.ஜ.க. அறிவிப்பு

938
0
SHARE
Ad

vaajpaaiபுதுடெல்லி, ஜூன் 6- முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்(வயது 88) உடல்நிலை குன்றிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக புதுடெல்லி உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் நேற்று வதந்திகள் பரவின.

அவரது நலவிரும்பிகள் பலர் பா.ஜ.க. தலைமை அலுவலகங்களுக்கு அழைப்பு செய்து வாஜ்பாய்க்கு என்ன ஆயிற்று? அவர் எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்? என்று விசாரிக்க தொடங்கினார்கள்.

அப்போதுதான், வாஜ்பாய் உடல்நிலை தொடர்பாக தவறான வதந்திகள் தலைநகர் டெல்லியில் உலவி வருவதை மேலிடத் தலைவர்கள் உணர்ந்தனர்.

#TamilSchoolmychoice

இதனையடுத்து, புதுடெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகம் நேற்றிரவு ஓர் அறிக்கையை வெளியிட்டது. ‘முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உடல்நிலை தொடர்பாக சில நாளேடுகளில் யூகச் செய்திகள் வெளியாகியுள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது.

இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அவர் பூரண உடல் நலத்துடன் உள்ளார். அவரது ஆரோக்கியத்திற்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் அனைவரும் பிராத்தித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.