ஜூன் 6- இன்றைய நவீன உலகில் பலரும் தேங்காய் எண்ணெயை தலையில் தேய்ப்பதே இல்லை.
ஆனால், தேங்காய் எண்ணெயைப் போன்று உடலுக்கு நன்மை செய்யும் ஒரு பொருள் வேறு எதுவுமே இல்லை என்று கூறலாம்.
மேலும், குளிப்பதற்கு முன்பும் தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் பூசிக் கொண்டு ஊறவிட்டுக் குளிக்கலாம். இது தோலுக்கு மிகவும் நல்லது.
அதிகமாக அலங்காரம் போடும் பெண்கள், இரவில் முகத்தை சுத்தம் செய்து விட்டு தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டு படுக்கலாம். இதனால் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்.