Home இந்தியா வாஜ்பாய் மரணம் : சில அண்மையத் தகவல்கள்

வாஜ்பாய் மரணம் : சில அண்மையத் தகவல்கள்

1188
0
SHARE
Ad

புதுடில்லி – இன்று மாலை இந்திய நேரப்படி 5.05 மணிக்கு தனது 93-வது வயதில் காலமான இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் குறித்தும் அவரது இறுதிச் சடங்குகள் குறித்தும் சில அண்மையத் தகவல்கள்:

  • திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட குழுவினர் இறுதி மரியாதை செலுத்த புதுடில்லி புறப்படுகின்றனர். இன்று வியாழக்கிழமை இரவே ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் புதுடில்லி புறப்பட்டுச் சென்றனர்.
  • மத்திய அரசு 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் இந்தியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவித்துள்ளது.
  • வாஜ்பாய் இறுதிச் சடங்குகள் புதுடில்லி விஜய் கார்ட்ஸ் என்ற இடத்தில் மாலை 5.00 மணிக்கு நடைபெறும். வாஜ்பாய் நல்லடக்கத்திற்காக ஒன்றரை ஏக்கர் நிலம் இந்தப் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நல்லடக்கத்திற்கு முன்பாக வாஜ்பாய் உருவாக்கிய பாஜகவின் தலைமையகத்திற்கு அவரது நல்லுடல் கொண்டு செல்லப்படும்.
  • இந்தியாவின் அனைத்துத் தரப்புகளில் இருந்தும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து வாஜ்பாய் மறைவுக்காக அனுதாபச் செய்திகள் குவிந்து வருகின்றன.
  • தமிழக அரசு நாளை வெள்ளிக்கிழமை தமிழ் நாட்டில் பொது விடுமுறை அறிவித்துள்ளது. மற்ற சில மாநிலங்களும் பொதுவிடுமுறை அறிவித்துள்ளன.