Home Photo News வாஜ்பாய் இறுதி ஊர்வலம் : நடந்து சென்ற மோடி (படக் காட்சிகள்)

வாஜ்பாய் இறுதி ஊர்வலம் : நடந்து சென்ற மோடி (படக் காட்சிகள்)

1704
0
SHARE
Ad

புதுடில்லி – கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 16) காலமான முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் இறுதிச் சடங்குகள் நேற்று புதுடில்லியில் நடைபெற்று அவரது நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.

மருத்துவமனையில் இருந்து அவரது இல்லத்திற்கு அவரது நல்லுடல் கொண்டு செல்லப்பட்டு, அங்கு பல்வேறு தலைவர்கள் தங்களின் இறுதி மரியாதையை அவருக்குச் செலுத்தினர்.

நேற்று காலை அவரது நல்லுடல் இராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு, அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. முதலில் அவரது நல்லுடல் பாஜக தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அதன் பின்னர் விஜய் கார்ட்ஸ் என்னும் இடத்தில் அவரது நினைவிடத்திற்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியேக இடத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்று, அவரது நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

முன்னதாக அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றபோது, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பல தலைவர்கள் இராணுவ வாகனத்துடன் நடந்தே சென்று தங்களின் இறுதி மரியாதையை செலுத்தினர்.

அந்த இறுதி ஊர்வலத்தின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: படங்கள்: நன்றி – நரேந்திர மோடி டுவிட்டர் பக்கம்; இந்தியப் பிரதமர் டுவிட்டர் பக்கம்