Home கலை உலகம் ஜியா கான் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: சூரஜ் பஞ்சோலி கைது

ஜியா கான் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: சூரஜ் பஞ்சோலி கைது

637
0
SHARE
Ad

புதுடெல்லி, ஜூன் 10- பாலிவுட் நடிகை ஜியா கான் (வயது 25) மும்பையில் உள்ள தனது வீட்டில் கடந்த 3-ம்தேதி இரவு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலைக் குறிப்பு எதுவும் எழுதி வைக்காத நிலையில், அவரது கைதொலைப்பேசி உரையாடல்களை வைத்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

JIAH KHANஅப்போது, ஜியா கானுடன் கடைசியாக அவரது நண்பர் சூரஜ் பஞ்சோலி (வயது 21) பேசியது தெரியவந்தது. ஜியா கானும், சூரஜ் பஞ்சோலியும் நெருங்கி பழகியதாகவும், அந்த நட்பு முறிந்ததால் ஜியா கான் தற்கொலை செய்ததாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக கடந்த 4-ம் தேதி சூரஜ் பஞ்சோலி மற்றும் அவரது தந்தை ஆதித்யா பஞ்சோலி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

#TamilSchoolmychoice

ஜியா கானும், அவரது தாயாரும் எங்கள் நண்பர்கள் என்று கூறிய ஆதித்யா பஞ்சோலி, ஜியா தற்கொலை விஷயத்தில் தன் மகனை வில்லன் ஆக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், ஜியா கான் தற்கொலைக்கு முன்பு எழுதிய ஒரு கடிதத்தை அவரது பெற்றோர் போலீசில் அளித்தனர்.

6 பக்கம் கொண்ட அந்த கடிதத்தில் ஜியா கான் கூறியிருப்பதாவது:-

இந்த கடிதத்தை நீங்கள் வாசிக்கும்போது நான் இந்த உலகத்தைவிட்டு சென்றிருப்பேன். நான் மிகவும் உடைந்துபோய்விட்டேன். ஒரு வருடத்திற்கு முன்பு என்னை உன்னிடம் இழந்தேன். ஒரு வருடம் கழித்து திருமணம் செய்வதாக கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டாய். விருந்துகளும், பெண்களும்தான் உன்னுடைய வாழ்க்கையாக இருக்கிறது.

நீயும், என் வேலையும்தான் என்னுடைய வாழ்க்கை. நான் இந்த உலகத்தில் இருந்தால் உன்னிடம் கெஞ்சுவேன், உனக்காக ஏங்குவேன். எனவே, நான் போகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதம் யாருக்கு எழுதப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் சூரஜ் பஞ்சோலியை குறிப்பிட்டுத்தான் அவர் எழுதியிருப்பதாக அவரது தாயார் ரபியா கான் தெரிவித்தார். அதன் அடிப்படையில், சூரஜ் பஞ்சோலியிடம் போலீசார் இன்று கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு அவரை கைது செய்தனர்.

ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் கமிஷனர் விஸ்வாஸ் நாங்ரே பாட்டீல் உறுதி செய்தார். கைது செய்யப்பட்டுள்ள சுரஜ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.