Home 13வது பொதுத் தேர்தல் ஜூன் 22 கறுப்பு பேரணிக்கு கோலாலம்பூர் மாநகரசபை அனுமதி மறுப்பு

ஜூன் 22 கறுப்பு பேரணிக்கு கோலாலம்பூர் மாநகரசபை அனுமதி மறுப்பு

672
0
SHARE
Ad

Dato-Bandar-Ahmad-Phesalஜூன் 10 – எதிர்வரும் ஜூன் 22ஆம் தேதி கோலாலம்பூர் மெர்போக் திடலில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கறுப்பு பேரணி 505க்கு கோலாலம்பூர் மாநகரசபை அனுமதி மறுத்துள்ளது.

#TamilSchoolmychoice

நேற்று இதனைத் தெரிவித்துள்ள கோலாலம்பூர் மாநகரசபைத் தலைவரான (டத்தோ பண்டார்) டத்தோ அகமட் பெசால் தாலிப் (படம்), இருப்பினும் இந்த பேரணியை மற்ற உள்ளரங்குகளில் நடத்துவதற்கு தனக்கு ஆட்சேபணை இல்லை என்றும் அது குறித்து திறந்த மனதுடன் மக்கள் கூட்டணி தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாரா இருப்பதாகவும் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜூன் 23ஆம் தேதி ஒலிம்பிக் ரன் எனப்படும் ஓட்ட நிகழ்ச்சிக்காக, ஒலிம்பிக் மன்றத்திற்கு மெர்போக் திடல் வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நிகழ்ச்சிக்கு தயார் ஆவதற்காக ஒரு நாளுக்கு முன்னதாக அந்த இடம் தேவைப்படும் என்றும் அவர்கள் கடந்த ஆண்டு இறுதியிலேயே இந்த இடத்திற்கு விண்ணப்பித்ததாகவும் அகமட் பெசால் கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே, காவல் துறையினருடன் சந்திப்பு நடத்திய பிறகு தாங்கள் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மாநகரசபையும், காவல் துறையும் இந்த பேரணி நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளனர், ஒரே பிரச்சனை எந்த இடத்தில் நடத்துவது என்பதுதான் என்றும் நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது அகமட் பெசால் தெரிவித்தார்.

உள்ளரங்குகளான தித்திவாங்சா அரங்கம், மெர்டேக்கா அரங்கம் போன்ற இடங்களில் இந்த பேரணியை நடத்துவது குறித்து ஏற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும் என்றும் மாநகரசபைத் தலைவர் கேட்டுக் கொண்டார்.