Home நாடு அன்வாரும் பிரச்சனையின்றி சபாவுக்குள் அனுமதி!

அன்வாரும் பிரச்சனையின்றி சபாவுக்குள் அனுமதி!

467
0
SHARE
Ad

anwar-kit-siangஜூன் 9 – எந்தவிதப் பிரச்சனையுமின்றி ஜசெக தலைவர் லிம் கிட் சியாங் கோத்தாகினபாலு வழியாக சபா மாநிலத்திற்குள் நேற்று காலை அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் சண்டகான் நகரின் வழியாக சபாவுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

நேற்று மாலை 4.25 மணியளவில் சண்டகான் விமான நிலையம் வந்தடைந்த அன்வார் இப்ராகிமிற்கு சபா பிகேஆர் ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.

இதன்வழி, அவர்கள் இருவரும் சபாவில் நுழைவதற்கு தடை செய்யப்பட்டிருக்கின்றது என்று கூறப்பட்ட ஊகங்கள் ஒரு முடிவுக்கு வந்தன.

சண்டகானில் பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கிய கறுப்புப் பேரணி 505 நிகழ்வில் கலந்து கொண்ட அன்வார் பின்னர் நேற்றிரவு 8 மணிக்கு கோத்தாகினபாலுவில் நடைபெறும் பேரணியில் சென்று கலந்து கொண்டார்.

இதற்கிடையில் லிம் கிட் சியாங், கோத்தாகினபாலுவில் நடைபெற்ற அறுவடைத் திருவிழாவில், ஜசெகவின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார்.

நேற்றிரவு 8 மணிக்கு கோத்தா கினபாலுவில் நடைபெற்ற “கறுப்பு பேரணி 505 நிகழ்வில் அன்வாரும் கிட் சியாங்கும் மற்ற எதிர் கட்சித் தலைவர்களுடன் கலந்து கொண்டனர்.