Home கலை உலகம் தில்லுமுல்லு படத்திற்கு தடை விதிக்கக் கோரும் விசுவின் மனு நிராகரிப்பு!

தில்லுமுல்லு படத்திற்கு தடை விதிக்கக் கோரும் விசுவின் மனு நிராகரிப்பு!

531
0
SHARE
Ad

Thillumullu-featureசென்னை, ஜூன் 13 – அந்த காலத்தில் கே.பாலசந்தர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து சக்கைப் போடு போட்ட படம் தில்லுமுல்லு. அந்தப் படம் தற்போது மீண்டும் மறு ஆக்கம் செய்யப்பட்டு சிவா நடிப்பில் கூடிய விரைவில் வெளிவரவிருக்கின்றது.

#TamilSchoolmychoice

இந்த புதிய தில்லுமுல்லு படத்துக்கு தடை கோரி இயக்குனர் விசு சென்னைஉயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், தில்லுமுல்லு மூலப் படத்தின் திரைக்கதை வசனம் எழுதியவன் என்ற முறையில் என்னிடம் அனுமதிவாங்காமல் தில்லுமுல்லு படம் தயாரித்துள்ளனர். இந்த படம் நாளை திரைக்குவருகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவைநீதிபதி சுதாகர் விசாரித்து, பட தயாரிப்பாளர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. படத்தைதயாரித்துள்ள வேந்தர் மூவிஸ் நிறுவனம் சார்பாக மூத்த வக்கீல் நடராஜன்ஆஜராகிவாதாடினார்.

தனது வாதத்தில் அவர் கூறியதாவது:

1981ம் ஆண்டு கோல்மால் என்ற இந்தி படம் வெளியானது. அந்த படத்தைதழுவி தான் தில்லுமுல்லு ஒரிஜினல் படம் தயாரிக்கப்பட்டது. அதில் ரஜினிநடித்தார். அதன் பிறகு தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் இந்த படம் டப்பிங்செய்யப்பட்டது. அப்போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு தற்போது புதியதில்லுமுல்லு படத்துக்கு தடை கேட்பது நியாயமற்றது. இந்த படத்தைதயாரிப்பதற்கு முன்பு தில்லுமுல்லு ஒரிஜினல் படத்தின் தயாரிப்பாளர்களானகலாகேந்திரா மற்றும் கவிதாலயா நிறுவனத்திடம் முறையாக அனுமதிபெற்றிருக்கிறோம்.

புதிய தில்லுமுல்லு படத்தில் விசுவின் வசனம் துளி கூடஇடம்பெறவில்லை என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறோம். படத்துக்கு தடைவிதிக்ககூடாது. படம் வெளியிட அனுமதி வழங்க வேண்டும்”.

வழக்கறிஞரின் வாதத்தை நீதிபதி ஏற்றுக் கொண்டு, தில்லுமுல்லு படத்துக்கு தடைவிதிக்க முடியாது. வழக்கின் அடுத்த கட்டவிசாரணை ஜூலை மாதம் 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அன்றைய தினம் விசுபதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.