Home கலை உலகம் கவிஞர் வாலி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

கவிஞர் வாலி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

792
0
SHARE
Ad

Vaali-featureஜூன் 13 – பிரபல சினிமா பாடலாசிரியர் கவிஞர் வாலி உடல் நலக் குறைவால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 82 வயதாகும் இவருக்கு 2 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார்.

இதையடுத்து அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர். வாலி என்ற புனைபெயரோடு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

#TamilSchoolmychoice

கண்ணதாசனுக்கு நிகராக சினிமா உலகில் முத்திரை பதித்தவர் வாலி.

எம்.ஜி.ஆர்-சிவாஜி காலம் தொடங்கி இன்றைய தலைமுறையினர் வரை அவர் தொடர்ந்து சினிமா பாடல்கள் எழுதி வருகிறார். சிறந்த எழுத்தாளரும் ஆவார். ஓரிரு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆருக்காக இவர் எழுதிய பாடல்களால் எம்.ஜி.ஆரும் புகழும் பெருகியது. அதனால் கவிஞர் வாலியின் கவிதைத் திறமையும் உலகெங்கும் பரவி போற்றப்பட்டது.

சிறந்த நாடக எழுத்தாளராகவும், திரைப்பட வசனகர்த்தாவாகவும் திகழ்ந்தவர் வாலி.

இவரது தனித்துவமிக்க உரை நடையும் தமிழ் வாசகர்களிடையே பிரபலம். அவரது தனித்துவமிக்க நடையில் அவர் படைத்த இராமாயணம், மகாபாரதம் இரண்டும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

தற்போது அவர் குமுதம் வார இதழில் “மண் மொழி மக்கள்” என்ற தலைப்பில் தனது வாழ்க்கை அனுபவங்களையும், தனது வாழ்க்கையில் சந்தித்த, நட்பு பாராட்டிய நண்பர்களைப் பற்றியும் தொடராக எழுதி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.