Home இந்தியா மத்தியில் 3வது அணி அமைய வாய்ப்புகள் அதிகரிப்பு – சமாஜ்வாதி, தெலுங்குதேசம் கட்சிகள் ஆதரவு

மத்தியில் 3வது அணி அமைய வாய்ப்புகள் அதிகரிப்பு – சமாஜ்வாதி, தெலுங்குதேசம் கட்சிகள் ஆதரவு

459
0
SHARE
Ad

Tamil-Daily-News_48586237431புதுடெல்லி, ஜூன் 14 –  மத்தியில் 3வது அணி உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் அல்லாத கூட்டாச்சி முன்னணி என்ற 3வது அணியை அமைக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் குழு பிரச்சார தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐக்கிய ஜனதா தளம் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளது.

பாட்னாவில் நாளை தொடங்க உள்ள அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் இதுபற்றி ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது. மேற்கு வங்கம், ஓடிசா ஆகிய மாநில முதல்வர்களுடன் சேர்ந்து கூட்டாச்சி முன்னணி அமைக்கும் யோசனை பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

மேலும் இதுகுறித்து பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 3வது அணியில் சேர தெலுங்குதேசம், பிஜூ ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சிகளும் முன் வந்திருப்பதாக தெரிகிறது.

3வது அணி அமைய நேரம் வந்துவிட்டதாக உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

3வது அணி அமையும் வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், கூட்டணி பேரத்திற்காகவே மம்தா 3வது அணியை உருவாக்க முயற்சியிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மம்தா காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதா கட்சியுடன் தான் கூட்டணி வைப்பார் என அக்கட்சி கருத்து தெரிவித்துள்ளது.