Home நாடு பினாங்கு கோரப் புயல் – பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

பினாங்கு கோரப் புயல் – பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

597
0
SHARE
Ad

penang_storm_nst3 (1)ஜோர்ஜ் டவுன், ஜூன் 14 – பினாங்கு மாநிலத்தில் நேற்று வீசிய பலமான புயல் தாக்குதலில் சிக்கி இதுவரை இரண்டு பேர் பலியாகியுள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த ஜாஹிர் ஹுசேன் சுலைமான்(வயது 46) என்பவர் இன்று பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

கனரக வாகன ஓட்டுனரான அவர் நேற்று அம்னோ கட்டிடம் வழியாக வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த போது, புயலின் காரணமாக ஒளிவாங்கி கோபுரம் சரிந்து விழுந்ததது.penang_storm_nst

இதில் தலையில் பலத்த காயமுற்ற ஜாஹிர் உடனடியாக பினாங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருடன் அதே வாகனத்தில் பயணம் செய்த மற்றொரு ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினார்.

#TamilSchoolmychoice

அதே போல் ஆயர் ஈத்தாம் பகுதியில் மரம் வேறோடு சாய்ந்ததில் மோட்டார் வாகனமோட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.

இதுதவிர இச்சம்பவத்தில் மேலும் 7 பேர் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.